Skip to main content

Posts

பா.ஜ.க.வின் கடிவாளம் யாருடைய கையில்?

கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் நொண்டிச் சாக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யும் பரிதாபகரமான நிலையில் மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. இ ப் பொழுது உள்ளது. தனது கட்சியின் கொள்கை முடிவுகளையும் தீர்மானங்களையும் ஊடகங்களுக்கு அளிக்கும் முக்கியமான செய்தித் தொடர்பாளர்களையே தனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லாத ஏதோ விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எனக் கூறித் தனது பொறுப்பிலிருந்து அந்தக் கட்சி தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறது.  அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா மே 26ந் தேதி ‘ டைம்ஸ் நவ் ’ தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் பற்றியும் இஸ்லாம் மதம் பற்றியும் அவதூறான கருத்துகளைக் கூறினார். அதற்குக் கண்டனம் தெரிவித்தும்,   மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கான்பூரில் கடந்த 3ந் தேதி முஸ்லீம் மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதில் கலவரம் வெடித்துப் பலர் காயமுற்றனர். நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது போலிஸ். முஸ்லீம் மக்களின் இருப்பிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவோம் என அச்சுறுத்தி வருகிறது பா.ஜ.க. அரசு. அதே சமயத்தில் தில்லியில் பா...

தொழிலாளர்கள் நலனில் அக்கறையற்ற தமிழ்நாடு அரசும் தொழிற்சங்கத் தலைமைகளும் !

  இந்திய அரசினால் தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்பட்டு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் நான்கு புதிய சட்டத்தொகுப்புகளாக மாற்றப்பட்டன . இந்த சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத்   தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்கள் எதிர்ப்புகளைப் பலவகைகளில் தெரிவித்து வந்தாலும் இந்திய அரசோ புதிய தொழிலாளர் விரோதச்   சட்டங்களை நிறைவேற்றியதோடு அதனை நடைமுறைப்படுத்தும் வேலையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது . அந்த வகையில் மாநில அரசுகள் இந்தச் சட்டங்களையொட்டி மாநில அளவில் அதற்கான விதிமுறைகளை வகுக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது . மத்திய அரசின் உத்தரவையொட்டி அனைத்து மாநில அரசுகளும் அதற்கான வேலைகளைத் தொடங்கியிருக்கின்றன . தமிழ்நாட்டிலும் , மாநில அரசானது மூன்று சட்டத் தொகுப்புகளுக்கான   ( ஊதிய சட்டத் தொகுப்பு , பணியிடப் பாதுகாப்பு ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் குறித்த சட்டத்தொகுப்பு , தொழில் உறவுகள் சட்டத்தொகுப்பு ) விதிமுறைகளை ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி வெளியிட்டிருக்கின்றது . இதன் மீதான கருத்துகள் , ஆலோசன...