14.02.2023 அன்று ’ வடவர் வருகையும் தமிழ்நாடும் ’ எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தியாகு அவர்கள் பேசிய உரையை விமர்சனம் செய்து ’ வடவர் வருகையும் தியாகுவின் முதலாளிய வர்க்க சேவையும் ’ (https://senthazhalmagazine.blogspot.com/2023/02/blog-post_25.html) என்னும் தலைப்பிட்ட விமர்சனக் கட்டுரையைச் செந்தழல் இணைய இதழில் 25.02.2023 அன்று வெளியிட்டிருந்தோம் . தோழர் தியாகு அவர்கள் ‘தாழி’ எனும் மின்னிதழில் ‘ தமிழ் மக்களுக்கான சேவையும் குடியாட்சியக் கோரிக்கைகளும் ’ எனும் தலைப்பில் பதிலுரை அளித்திருந்தார் . இந்தப் பதிலுரையில் நாம் முன்வைத்த விமர்சனங்களுக்கான பதில்களை விடக் கேள்விகளாகத் தொக்கி நிற்பவைகளே அதிகம் . இதில் ஒரு செய்தியை மட்டும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துவிட்டு தியாகுவின் பதிலுரையை ஆய்வு செய்வோம் . தியாகு அவர்களின் கருத்தரங்கு உரையில் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகையைத் தடுக்கவேண்டும் எனப் பேசியதாக விமர்சன உரையில் குறிப்பிட்டிருந்தோம் , ஆனால் , அவர் கட்டுப்படுத்த வேண்டும் என்றே கூறியிருந்தார் . வார்த்தைகளிலும் அதன் பொருளிலும் வித்தியாசம் இருந்தாலும் , என்னுடைய பதிலுரை...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்