இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில், பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த நாட்டுக்குள்ளேயே உணவு, தண்ணீர் கிடைக்காமல் பசி, பட்டினியோடு முற்றுகைக்குள் முடக்கியதும், மருத்துவமனைகளை குண்டுவீசி அழித்ததும், வகைதொகையில்லாமல் அப்பாவிப் பொதுமக்களை, குழந்தைகளை, பெண்களைக் கொன்றதும் பார்த்து உலகெங்கும் இஸ்ரேலுக்கு எதிராக கண்டனக் குரல் சமீப காலத்தில் கோபாவேசமாக வெடித்துக் கொண்டிருக்கிறது. கண்மூடித்தனமான இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேலையும், அதனை ஆதரித்த பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவையும் எதிர்த்து, அந்தந்த நாட்டு அரசுகளை அச்சுறுத்தும் அளவிற்கு மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். மனிதனை மனிதன் பகைக்கும் சிறு புள்ளியிலிருந்து விரிந்ததுதான் போர் எனும் எல்லையற்ற மோதலின் பெருவெளி. மனிதனை மனிதன் ஏன் பகைக்கவேண்டும்? காடுகளுக்குள் வாழ்ந்த விலங்குகள் தங்கள் பகுதிக்குள் வேற்று விலங்குகளை வரவிடாமல் விரட்டின. அவைகள் உணவுக்காக குறிப்பிட்ட தங்கள் பகுதியின் விளைச்சலையே சார்ந்திருந்தன. அவற்றை பறிகொடுத்துவிடக்கூடாது என்பதே காரணம். ஏனையவற்றுக்கு தங்கள் பகுதியின் பற்றாக்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்