உக்ரைன், மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்கள் மேற்கு ஏகாதிபத்தியத்தின் மறைவுக்கும் வீழ்ச்சிக்குமான முன்னறிவிப்பு
வரலாற்று ரீதியாக பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பிரதேசத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையில் அதிகரித்துவரும் போர் நடவடிக்கைகள் , உக்ரைனின் ஆட்சியாளர்களிடம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் போர் நடவடிக்கைகள் , பாதிப்புகள் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக மேற்கு நாடுகளின் ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டன ; ஆனால் இப்போது அந்த ஊடகங்கள் மேற்குலக மேலாதிக்கங்களின் துணைக்கோளாக இருக்கும் இஸ்ரேல் , பாலஸ்தீனர்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி அதிகம் பேசுகின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள விரோதம் அவற்றின் அருகில் உள்ள அரபு நாடுகளிலும் பரவக்கூடும் என்னும் அச்சத்தையும் உருவாக்கி உள்ளது. இதனால் ரசியாவுக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் தனக்கு அளிக்கும் ஆதரவு குறைந்து விடுமோ என்று உக்ரைன் ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றனர். உண்மையில் , உக்ரைனுக்குத் தர இருந்த லட்சக்கணக்கான பீரங்கிகுண்டுகளை அமெரிக்கா இஸ்ரேலுக்கு மடைமாற்றம் செய்துள்ளது என்று ' ஆக்சியோஸ் ' என்னும் மேற்கு ஊடகம் 19, அக்டோபர் , 2023 அன்று அறிவித்தது. ஆகவே , உக்ரைன...