Skip to main content

Posts

Showing posts from September, 2026

இலக்கு இணைய இதழின் பதில் மீது சில கருத்துரைகள்!

1. இந்தியாவின் இன்றைய புரட்சிக் கட்டம் சோசலிசப் புரட்சிதான் என எங்களுடைய நிலைப்பாட்டிற்கு இலக்கு குழு பதில் அளிக்கும்போது , அக்டோபர் புரட்சியின் நான்காம் ஆண்டு ஒட்டி லெனின் எழுதிய கட்டுரையை ( இலக்கு கூறுவது போல அது லெனின் ஆற்றிய உரை அல்ல ) “ திருப்பிப் பார்த்து உடும்புப் பிடியாகப் பிடித்துள்ள “ சோசலிசப் புரட்சி ” பற்றி வாய்ப்பாட்டு வாதத்தை லெனின் அக்டோபர் புரட்சியின் படிப்பினையில் என்ன சொல்லியுள்ளார் என்பதைக் கிரகித்து மற்றவற்றைப் பேசட்டும் ” . எனக் கூறுகிறது . அந்தக் கட்டுரையில் லெனின் என்ன கூறுகிறார் எனப் பார்ப்போம் . ‘1917 வரை ரசியாவில் இருந்து வந்த மத்தியகாலப் பண்புகள் , பண்ணையடிமைத்தனம் நிலப்பிரபுத்துவம் ஆகியவற்றை அக்டோபர் புரட்சி ஒழித்தது . சமூகப் பிரிவுகள் (social estates) நில உரிமை ஆகியவற்றை ஒழித்தது . பெண்களின் நிலைமையை மாற்றியது . மத ஒடுக்குமுறை , தேசிய இன ஒடுக்குமுறை ஆகியவற்றை ஒழித்தது . இவை முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் உள்ளடக்கம் . 125 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சிலும் , 250 ஆண்டுகளுக்கு மு...