Skip to main content

Posts

தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை நிறுவனங்கள் கொண்டு வரப்பட வேண்டும்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் செயலைக் காங்கிரசின்   தலைமையிலான அரசு தொடங்கி வைத்தது. மோடியின் அரசு இன்று அதை வேகமாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.      சேலம் உருக்காலை, கர்நாடகத்தில் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகுத் தொழிற்சாலை, மேற்கு வங்காளத்தில் துர்காபூரில் உள்ள உலோகக் கலப்பு எஃகுத் தொழிற்சாலை ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஜிண்டால், வேதாந்தா, டாட்டா, அர்செலோர் மிட்டல் ஆகிய முதலாளிய நிறுவனங்கள்   அவற்றை வாங்கத் தயாராக உள்ளன.        அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் பொறுப்பு அதானி நிறுவனத்திற்குத் தரப்பட்டுள்ளது.      ரயில்வேத் துறையில் மேற்குவங்காளத்தில் சித்தரஞ்சன் லோகோமோடிவ் வொர்க்ஸ், தமிழ்நாட்டில் பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, மேலும் பனாரசில் உள்ள டீசல் லோகோமோடிவ் வொர்க்ஸ், கபூர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி நவீன இரும்புப் பெட்டித் தொழிற்...

காசுமீர் தேசிய இனப் பிரச்சனை - பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டம்

எழுபது ஆண்டுகள் கடந்தும் காசுமீர் மக்கள் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. காசுமீர் மக்களின் விருப்பத்தை அறியாமலேயே, அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இல்லாத சமயத்தில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஆட்சியின் கீழ், அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மக்களுக்கு அரசியல் சாசன அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்த மாதம் (ஆகஸ்ட்) 5 ஆம் தேதி நீக்கியு ள்ளது மோடியின் அரசு. மத்திய அரசில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி எதேச்சதிகாரத்துடன் இந்த ஜனநாயகப் படுகொலையை மோடி அரசு நிகழ்த்தியுள்ளது. இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களை அங்கு நிறுத்தி வைத்து, மக்களை வீதிகளில் நடமாட விடாமல் வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, அந்த மக்களின் வளர்ச்சிக்காகவே இதைச் செய்ததாகக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து வருகிறது இந்த அரசு.             1947ல் பிரிட்டன் ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியலதிகாரத்தை இந்திய முதலாளிய வர்க்கத்திடமும் பாகிஸ்தானின் முதலாளி வர்க்கத்திடமும் இரண்டாகப் பிரித்துக் கை மாற்றியது....