கொரோனா ஊரடங்கு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் முதலாளிய வர்க்கத்தினரின் நலன்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் வேகவேகமாக நிறைவேற்றி வருகின்றனர். அவற்றிற்கு மக்கள் தங்களுடைய எதிர்ப்புகளைக் காட்ட முடியாமல் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு முடிந்து மக்கள் வேலைகளுக்குத் திரும்பும்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறைகள் அனைத்தும் இந்த நாட்டு முதலாளிகளின் கைகளிலும் அந்நிய நாட்டு முதலாளிகளின் கைகளிலும் சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு வேகமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்திய ரயில்வேத் துறை உலகிலேயே நான்காவது பெரிய ரயில்வேத் துறை. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது. இந்தத் துறையில் 109 வழித்தடங்களையும் 151 தொடர்வண்டிகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதை அண்மையில் அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கு...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்