Skip to main content

Posts

ஜார்ஜ் ப்ளாய்டும் - இடையப்பட்டி முருகேசனும்

   நேற்று (23.6.2021) சேலம் மாவட்டம் இடையப்பட்டி முருகேசனும் அவருடையை இரண்டு நண்பர்களும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வரும் பொழுது அவர்களைப் பிடித்த  உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசன் மீது கண் முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அதனால் முருகேசன் உயிர் இழந்துள்ளார்.             முருகேன்   மீது   வெறித்தனமாக   லத்தியைக்   கொண்டு தாக்கிய பொழுது ' சார் , சார் , அடிக்காதீங்க விடுங்க, சார் ' என அவர் கெஞ்சுவதைக் காணொளியில் காணமுடிகிறது . ஆனால் , அவர் அடி தாங்க முடியாமல் வலியால் கதறுவதையும்     பொருட்படுத்தாமல், ஈவு இரக்கம் சிறிதும் இல்லாமல் அவர் உயிர் போகும் அளவுக்கு அந்த அதிகார வெறி கொண்ட உதவி ஆய்வாளர்   தாக்கியுள்ளார்.                இந்தக் காணொளி அமெரிக்க போலிஸ் அதிகாரி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மீது நடத்திய   கொடூரமான தாக்குதலை நமக்கு நினைவுபடுத்துகிறது . அப்பொழுது   ஜார்ஜ் பிளாய்ட் , ' என்னால் மூச்சு ...

நீட் (NEET) தேர்வை ஒழித்து விட்டால் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைத்து விடுமா?

தமிழகத்தில் நீட் (NEET) நுழைவுத் தேர்வு இரத்து செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ . கே . இராசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது . நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் , நீட் தேர்வை ஒழித்துக்கட்டி தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகளை மீட்டெடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரங்கள் முதலாளித்துவக்கட்சிகளாலும் , முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நீட் நுழைவுத் தேர்விற்குப் பிறகு   தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ? அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? அதனுடைய அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்பதனைப் பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நீட் தேர்வு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது . வசதி படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி! நீட் தேர்வு மட்டுமல்லாமல் , இதற்கு முன்பான தேர்வு முறையும் கூட தனியார் பள்ளிகளில் படித்த, வசதி...

கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கும் முதலாளிய வர்க்கத்திற்கும்தான் உண்டு!

  கொரோனாப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை வேகமாகப் பாதித்து வருகின்றது . நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியில்லாமல் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவல நிலை நாடெங்கிலும் தலை விரித்தாடுகிறது . அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாததாலும் , ஆக்சிஜனுடன் கூடிய   படுக்கைகள் போதுமான அளவு இல்லாததாலும் மருத்துவமனையின் தரைகளிலும் வளாகங்களிலும் எண்ணற்ற நோயாளிகள் மருத்துவத்திற்காகக் காத்துக் கிடக்கின்றனர் . பெரும்பாலான நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பரிதாபமாக இறந்து போகின்றனர் . ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் ஆம்புலன்சுகளிலும் , ஆட்டோவிலும் உட்கார்ந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு வெளியே     காத்துக் கிடக்கின்றனர் . பெரும் தேடலுக்கும் , காத்திருப்புகளுக்கும் பின்னர் சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் வாயு கிடைக்கிறது . எத்தனை பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்ற உண்மை விவரங்கள் மறைக்கப்படுகின்றன . மின் மயானங்களில் பிணங்கள் எரிப...