Skip to main content

Posts

கொரோனாப் பெருந்தொற்றும் பொருளாதார நெருக்கடியும்!

  கொரானா பேரிடரினால் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தங்களை வளர்ந்த நாடுகள், நாகரிகமடைந்த நாடுகள், தன்னிறைவு பெற்ற நாடுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் இந்தக் கதையாடல்கள் எல்லாம் தவிடுபொடியாகிப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள முதலாளித்துவ அரசுகளால் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் பெரும்பகுதி சுரண்டும் வர்க்கங்களின் இலாபத்தை ஈடுகட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, தங்கள் வருவாய் இழந்து, அன்றாடத் தேவைகளுக்கு அல்லல்படும் மக்களுக்கோ, பட்டினி கிடந்து சாகும் மக்களுக்கோ சொற்பமான அளவையே அளித்துள்ளது.   அரசிடம் சலுகைகள் பெற்ற முதலாளிகளோ, வேலைவாய்ப்பைப் பெருக்கி, கூலியை உறுதிப்படுத்திப் பொருளாதார நெருக்கடியைச் சரி செய்வதற்கு எந்தவித முயற்சியையும் செய்யாமல், அதனைத் தங்களுக்கான வருவாயாகச் சுருட்டிப் பையில் வைத்துக் கொண்டனர். இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். உலகளாவிய அளவில் ...

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் கிக் (GIG) பொருளாதாரம்!

கிக்( GIG) பொருளாதாரம் என்பது குறுகிய கால , நிச்சயமற்ற தன்மையதான வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே பணிக்கு அமர்த்தி , தான் விரும்பும் பொழுது அமர்த்தவும் , துரத்தவும் ( HIRE and FIRE) கூடிய நிரந்தரத் தன்மையற்ற வேலைமுறையைக் கொண்டு தொழிலாளர்களை வரைமுறையின்றிச் சுரண்டக் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த வேலை முறை இன்று பரவலாக அதிகரித்து வருகிறது. கிக் வேலைமுறையில் இருக்கும் வேலைகள் தற்காலிகமானவையோ , பருவகாலங்களைச் சார்ந்ததோ அல்ல , தொடர்ச்சியான வேலைகளை அளிக்கும் சாத்தியங்களைக் கொண்டவையாகும். வேலைகள் நீடித்த தன்மையைக் கொண்டதாக இருந்தாலும் , அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்காலிக நிலையிலேயே வைக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர் இந்த வேலை முறையில் வேலை நேரமானது மிக குறுகியதாகவோ அல்லது மிக நீண்டதாகவோ இருக்கக் கூடும். இது வேலையின் அளவு அடிப்படையில் ஊதிய முறையைக் கொண்டுள்ளது. எனினும் வேலையானது தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. முதலாளிகள் வேலை வழங்கும்பொழுது முடித்துத் தர வேண்டும் , மற்ற நேரங்களில் வேலைக்காகக் காத்திருக்க வேண்டும். இந...

ஜார்ஜ் ப்ளாய்டும் - இடையப்பட்டி முருகேசனும்

   நேற்று (23.6.2021) சேலம் மாவட்டம் இடையப்பட்டி முருகேசனும் அவருடையை இரண்டு நண்பர்களும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வரும் பொழுது அவர்களைப் பிடித்த  உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசன் மீது கண் முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அதனால் முருகேசன் உயிர் இழந்துள்ளார்.             முருகேன்   மீது   வெறித்தனமாக   லத்தியைக்   கொண்டு தாக்கிய பொழுது ' சார் , சார் , அடிக்காதீங்க விடுங்க, சார் ' என அவர் கெஞ்சுவதைக் காணொளியில் காணமுடிகிறது . ஆனால் , அவர் அடி தாங்க முடியாமல் வலியால் கதறுவதையும்     பொருட்படுத்தாமல், ஈவு இரக்கம் சிறிதும் இல்லாமல் அவர் உயிர் போகும் அளவுக்கு அந்த அதிகார வெறி கொண்ட உதவி ஆய்வாளர்   தாக்கியுள்ளார்.                இந்தக் காணொளி அமெரிக்க போலிஸ் அதிகாரி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மீது நடத்திய   கொடூரமான தாக்குதலை நமக்கு நினைவுபடுத்துகிறது . அப்பொழுது   ஜார்ஜ் பிளாய்ட் , ' என்னால் மூச்சு ...

நீட் (NEET) தேர்வை ஒழித்து விட்டால் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைத்து விடுமா?

தமிழகத்தில் நீட் (NEET) நுழைவுத் தேர்வு இரத்து செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ . கே . இராசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது . நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் , நீட் தேர்வை ஒழித்துக்கட்டி தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகளை மீட்டெடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரங்கள் முதலாளித்துவக்கட்சிகளாலும் , முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நீட் நுழைவுத் தேர்விற்குப் பிறகு   தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ? அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? அதனுடைய அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்பதனைப் பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நீட் தேர்வு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது . வசதி படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி! நீட் தேர்வு மட்டுமல்லாமல் , இதற்கு முன்பான தேர்வு முறையும் கூட தனியார் பள்ளிகளில் படித்த, வசதி...