தில்லிக்குத் தெற்குப் பகுதியில் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள நுஹ் பகுதி முன்பு மேவாட் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 11 இலட்சம். அதில் 79% மக்கள் முஸ்லீம் மக்கள். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள். கால்நடை வளர்த்தலும் பால் பண்ணைகளும் அவர்களுக்கு வருமானம் அளிக்கும் தொழிலாக உள்ளது. இது ஆரவல்லி மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ள வளமான, அழகான பகுதியாகும். நுஹ் பகுதியில் பண்டைய கால மூன்று சிவன் கோயில்கள் உள்ளன. மேலும் இந்தப் பகுதியைத் தன் மாடுகள் மேயக் கிருஷ்ணன் பயன்படுத்தி வந்ததாக இந்துக்கள் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை அரசியலாக்கி அரசியல் இலாபம் தேடத் திட்டமிட்டுள்ளனர் இந்துத்துவவாதிகள். அதற்காக இந்துக்களின் புனிதமான இந்தப் பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஸ்வ இந்து பரிசத் மூன்றாண்டுகளுக்கு முன்பு பிராஜ்மண்டல் யாத்திரையைத் தொடங்கியது. பிராஜ் மண்டல் என்றால் கிருஷ்ணனின் மண்டலம் என்று பொருள். முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் இந்த வளமான பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் சங் பரிவாரங்களின் திட்டம். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் விஷ்வ ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்