Skip to main content

Posts

வேலைநேரம் நீட்டிப்பும், முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை அதிகரிக்க வழிவகுக்கும் முதலாளித்துவக் கட்சிகளும்!

  கர்நாடக அரசு கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் (Karnataka Shops and Commercial Establishments (Amendment) Bill 2024) திருத்தம் செய்வதற்கான மசோதா ஒன்றை கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டு வந்தது . தொழிற்சங்கங்களின் , தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதனைச் சட்டமாக்குவதைக் காலம் தாழ்த்தி வந்தது . ஆனால் , ஆந்திர அரசு வேலைநேர அதிகரிப்பிற்கான சட்ட முன்வடிவைக் கொண்டு வந்த பின் கர்நாடக அரசும் மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்துவருகின்றது . மகாராஷ்டிரா , உத்திரப்பிரதேசம் , அரியானா , ஹிமாச்சல்பிரதேசம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வேலைநேரத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளைச் செய்திருக்கும் நிலையில் , ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு , ஒரு நாளின் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது . இதற்கு ஏற்பத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே . பார்த்தசாரதி தெரிவித்துள்ளார் . அந்தச் சட்டத்தில் வழக்கமான வேலைநேரத்தைத் தாண்டிக் கூடுதலாக வேலை செய...

பாசிச இஸ்ரேலின் காசா இனப் படுகொலையைக் கண்டித்து அந்த நாட்டுக் கல்வியாளர்களின் கண்டனக் கடிதம்!

  4.6.2025 புதன்கிழமை அன்று இஸ்ரேலிய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1200 பேராசிரியர்களும் நிர்வாகிகளும், இஸ்ரேல் ராணுவம் காசாவில் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான கொடிய குற்றங்களை எதிர்த்து வெளிப்படையான கண்டனக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இஸ்ரேலின் பல்கலைக்கழகங்களின் தலைவர்களின் சங்கம், பொதுக் கல்லூரிகளின் பேராசிரியர்களின் மன்றம், இஸ்ரேல் விஞ்ஞானம் மற்றும் மானுடவியல் கழகம் மற்றும் இஸ்ரேல் ஜனநாயகத்திற்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கடிதத்தை எழுதி உள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து கிடியோன்'ஸ் சேரியட்ஸ் நடவடிக்கை (Operation Gideon’s chariots) என்ற பெயரில் காசாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம் பாலஸ்தீன மக்களைப் பட்டினியில் தள்ளி முற்றிலுமாக அழித்தொழித்து காசாவைத் தூய்மைப்படுத்தும் இஸ்ரேலின் கொள்கையின் வெளிப்பாடாகும் இந்தக் கடிதம் பின் வருமாறு கூறுகிறது: 18.03.2025ல் போர் நிறுத்த விதிகளை இஸ்ரேல் மீறியதில் இருந்து, காசாவில் ஏறத்தாழ 3000 பேர...

உதவி என்ற பெயரில் பாலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்க, இஸ்ரேல் பாசிச அரக்கர்கள்!

  27.5.2025 செவ்வாய்க்கிழமை அன்று தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் உதவி வேண்டி இருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் குறைந்தபட்சம் ஐந்து பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் ; 46 பேர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்களுக்கு மற்ற உலக நாடுகள் அளிக்கும் எந்த உதவியும் கிடைக்காமல்   மூன்று மாதங்களாக இஸ்ரேல் ராணுவம் உறுதியாகத் தடுத்து வந்த நிலையில் , அமெரிக்காவும் இஸ்ரேலும் அறிவித்த அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் உணவு வழங்கும் மையங்களில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் உணவும் அத்தியாவசியப் பொருள்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குவிந்தனர். ஆனால் ஆய்வாளர்களால் இந்நிகழ்வு படுகொலைக்காகத் திட்டமிட்ட ஒன்றாகவே கருதப்படுகிறது.   ‌குவட்ஸ் செய்தித் தளத்தின் , (Quds News Network) காசா ஊடக அலுவலகம் , " இன்று ரஃபாவில் நடந்த நிகழ்வு பாலஸ்தீனர்களை கொன்று குவிக்கத் திட்டமிடப்பட்ட ஒரு செயலாகும் ; இது முழு அளவிலான போர்க் குற்றமாகும் ; சாதாரண குடிமக்களை--- ஏறத்தாழ 90 நாட்கள் முற்றுகை என்ற பெயரில் பட்டினிக்குள் தள்ளப்பட்டு பலவீனமாக இருந்த மக்களைத் திட்டமிட்டுச் சிறிதும்...

பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!

  உயர்கல்வி நிறுவனங்களின் மீதும் பல்கலைக்கழகங்களின் மீதும் அதிகரிக்கும் தாக்குதல்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் உள்ளார்ந்த அச்சத்தை உணர்த்துகின்றன. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பல்கலைக்கழகங்களின் மீது கூறும் விமர்சனங்களும் , கொலம்பியா , ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகங்களின் மீது நடத்தும் தாக்குதல்களும் , கல்வி நிறுவனங்களான ஜவஹர்லால் பல்கலைக்கழகம் , ஹைதராபாத் பல்கலைக்கழகம் , ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மீதான பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்துள்ள பாஜக அரசாங்கத்தின் தாக்குதல்களும் கேள்வி எழுப்பும் கல்வி நிறுவனங்களின் மீது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிகரிக்கும் வன்முறைக்குச் சில சான்றுகளாகும். இவை அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடப்பதோடு நிற்கவில்லை ; ஐரோப்பாவில் உள்ள பல பல்கலைக்கழகங்களும் மற்ற பிற நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களால் இதே போன்ற அச்சுறுத்தல்களைத் தினம் தோறும் சந்தித்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் நிதி உதவிகளை நிறுத்துவது , அரசியல் ரீதியான மிரட்டல்கள் , அதிகார வர்க்கத்தின் தொல்லைகள் , அரசாங்கம் மற்றும் சட்ட ...