Skip to main content

Posts

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில் சொந்த நாட்டிலேயே மக்களை அகதிகளாக்கும் தேர்தல் ஆணையம்

  பீகாரில் வரும் நவம்பர் மாதத்திற்குள் சட்டமன்றத் தேர்தல் நடத்தவேண்டிய சூழலில் , தேர்தல் ஆணையம் ' சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் ' என்ற பெயரில் 2003 க்குப் பிறகு யாரெல்லாம் வாக்காளர் பட்டியலில் உறுப்பினர்களாக இணைந்துள்ளார்களோ அவர்கள் எல்லாம் 11 வகையான ஆவணங்களின் மூலம் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் என ஜுலை மாதம் 24 அன்று அறிவிப்பை வெளியிட்டது . ஆனால் , இந்திய அரசு மிக முக்கியமானதாகக் கருதும் ஆதார் அட்டையோ , குடும்ப அட்டையோ அல்லது வாக்காளர் அட்டையோ ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது . பீகாரில் மொத்தம் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர் . இவர்களில் 4.93 கோடி பேர் 2003 இல் வாக்காளர் பட்டியலில் இருந்தவர்கள் , 2.96 கோடி பேர் அதற்கு பின்பு வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் . பின்னர் சொல்லபட்ட 2.96 கோடி வாக்காளர்கள் , அவர்களுடைய பிறந்த தேதியையோ அல்லது பிறந்த இடத்தையோ நிரூபணம் செய்து , இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்திரவிட்டுள்ளது . வெளிநாடுகளிலிருந்து குடியேறியுள்ளவர்களைக் கண்டறிந்து ...

புதிய தொழிலாளர் சட்டங்களால் முற்றிலும் சீர்குலைக்கப்படும் தொழிலாளர் உரிமைகளின் ஏழு முக்கியக் கொள்கைகள்

  இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில் , தொழிலாளர்களும் தொழிலாளர்களின் உரிமைகளும் எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன . நமது நாட்டில் , ஏராளமான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கூடக் கிடைப்பதில்லை . அவர்கள் எட்டு மணி நேரத்துக்கும் கூடுதலாக , மிகை நேர ஊதியமும் (over time) இல்லாமல் , வார விடுப்பும் இல்லாமல் உழைக்கின்றனர் . இப்போது நிலையான வேலையிடங்களில் , நிலையான அல்லது நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலாளர்களே மிகுதியாக இருக்கின்றனர் . தொழிற்சங்க அங்கீகாரம் என்பது குதிரைக் கொம்பாக ஆகிவருகிறது . சமூகப் பாதுகாப்புக்கான பொறியமைவுகள் அதை அடைவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்துகின்றன , பாகுபாடுகள் காட்டுகின்றன . மேலும் கூடுதலாக , தொழிலாளர் சட்டங்கள் அனைத்தும் பல்வேறு விதமாக விளக்கங்கள் கொடுக்கக்கூடிய வகையில் பூடகமாகவும் பல்வேறு ஆளுகை வரம்புகள் கொண்டவையாகவும் இருக்கின்றன . சட்டத்தில் இவ்வளவு பலவீனங்கள் இருந்தபோதும் , இருபதாம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த ஜனநாயகத் தொழிற்சங்கங்கள் தலைமையிலான நீடித்த தொழிலாளர் ...