Skip to main content

Posts

Showing posts from November, 2026

கம்யூனிசம் வெறும் கற்பனைதானா?

  " கம்யூனிசம் காகிதத்தில் பார்க்கும் போது மட்டும் சிறப்பாக உள்ளது" என்பது கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக பெரும் அளவில் வீசப்படும் கருத்தாகும். இவ்வாறு கூறுபவர்கள் கம்யூனிசத்திற்கு எதிரானவர்களும் முதலாளியத்தின் ஆதரவாளர்களும் மட்டும் இவ்வாறு கூறுவதில்லை. முதலாளியத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட , கம்யூனிசத்தை கற்பனாவாதக் கனவாக அல்லது ஒரு சர்வாதிகார ஆட்சியாகக் கருதி அதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். இரண்டு அடிப்படையான காரணங்களில் இருந்து இந்த விவாதம் எழுகிறது. அவை: i) மார்க்சிய சோசலிசம் பற்றிய முழுமையான தெளிவு இல்லாதது, மற்றும் கற்பனாவாத சோசலிசத்திலிருந்து மார்க்சிய சோசியலிசம் எவ்வாறு வேறுபடுகிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளாதது. ii) கற்பனை செய்வதற்கான திறமை இல்லாததும் நம்பிக்கை இழந்த தன்மையும். இவை இரண்டையும் நாம் மிக ஆழமாக ஆராய்வோம். 1) " சோசலிசம்" என்பதன் அர்த்தத்தை தவறாகப் புரிந்து கொள்வது.   " சோசலிசம் என்பது அரசாங்கமே மக்களுக்கான அனைத்தையும் செய்வது" சோசலிச அமைப்புமுறை என்பது " அரசே மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்ய...