நான் பல ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ‘ உன்னைக் கண்டறிதல் ’ என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகிறேன் . அது பதின்ம வயதினர் தங்களுடைய சொந்த தனித்துவக் குரலையும் அடையாளத்தையும் கண்டறியவும் விடலைப் பருவ ஆண்டுகளில் மாறுபாட்டுக்கிடமின்றி உடன்வரும் இருத்தலியப் பதட்டநிலையைக் கையாளவும் உதவுவதைக் குறிக்கோளாகக் கொண்டது . இந்தப் பயிற்சிப் பட்டறைகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்று , செய்தித் தாள்களிலிருந்தும் இதழ்களிலிருந்தும் படங்களை வெட்டி , அவர்களுடைய எதிர்பார்ப்புக்களையும் கனவுகளையும் , தனித்துவ ஆளுமைகளையும் சித்தரிக்கும் வகையில் ஒட்டி வைப்பதாகும் . இதற்காக , நான் அவர்களுடைய வீடுகளிலிருந்து பழைய இதழ்களையும் செய்தித்தாள்களையும் கொண்டுவருமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்வேன் . கோவிட் –19 பெருந்தொற்றும் அதன்விளைவாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டதும் இந்த அமர்வுகளில் இரண்டு ஆண்டுகள் இடைவெளியை ஏற்படுத்தியது . இந்த ஆண்டு அந்தப் பயிற்சிப் பட்டறைகளை மீண்டும் தொடங்கியதால் இந்த மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எந்த அளவுக்கு உலகக் கண்ணோட்டத்த...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்