Skip to main content

Posts

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

இயற்கையைப் பாதுகாக்கப் போராடுவது கம்யூனிஸ்டுகளின் கடமை!

  1992 ஆம் ஆண்டில் ரியோ டி ஜெனிரோவில் தொடங்கிய கட்சிகளின் மாநாடு ( COP -- The Conference of Parties) பருவநிலை மாற்றங்கள் , அவற்றால் உலக அளவில் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்புக்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த பருவநிலை மாற்றம் மீதான ஐ.நா.வின் கட்டமைப்பு மாநாடு ( UN Framework Convention on Climate Change (UNFCCC) என்ற அமைப்பை ஏற்படுத்தியது. பல்வேறு விவாதங்களின் விளைவாக 1997- ஆம் ஆண்டில் ஜப்பானின் கியோட்டோவில் நடைபெற்ற COP 3- வது மாநாடு முதன் முறையாக முதலாளிய நாடுகள் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பசுமைக் குடில் வாயுக்களை 2008--2012 ஆம் ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டிய அளவை சட்டபூர்வமாகக் குறித்தது.   2015 பாரிசில் நடந்த COP21 மாநாடு பூமியின் அதிகரிக்கும் வெப்ப அளவை 2 சென்டிகிரேடு குறைப்பதை அதிகபட்ச அளவாகவும் 1.5 சென்டிகிரேடை குறைந்தபட்ச அளவாகவும் நிர்ணயித்தது ; மேலும் இதற்காக ஒவ்வொரு நாடும் தீர்மானமான அளவில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிர்ணயித்தது.     ஒவ்வொரு ஆண்டும் ஆப்பிரிக்கா , ஆசியா , லத்தின் அமெரிக்கா , கரீபியன் , மத்திய மற்றும் கிழக்கு...

மனிதகுலத்திற்கு எதிரான மரண வியாபாரிகள்!

  முதலாளிய உற்பத்திமுறை இலாபத்தை அடிப்படையாகக் கொண்டது . மென்மேலும் இலாபத்தைப் பெருக்குவதும் மூலதனத்தைக் குவிப்பதும்தான் அதன் நோக்கம் . தொடர்ந்து சந்தையைத் தக்கவைத்துக்கொள்ளவும் , மேலும் சந்தையை விரிவாக்கவும் அது பல வழிகளை மேற்கொள்கிறது . தொழில்நுட்பத்தில் மேம்பாடு தொடர்ந்து தொழில்நுட்பங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் தேவைகளைப் புதியதாக உருவாக்கி தன் உற்பத்தியைத் தொடர்வதும் இலாபம் சம்பாதிப்பதும் ஒரு வழி . எடுத்துக்காட்டாக , அலைபேசியை (cellphone) எடுத்துக்கொள்வோம் . அதில் புதிய புதிய மாற்றங்களை தொழில்நுட்பத்தின் மூலம் புகுத்துவதன் மூலம் முந்தைய தயாரிப்புகளை (models) கால வழக்கு ஒழிந்துபோகச் செய்கிறது . மேம்பாடு செய்யப்பட்ட அலைபேசிகளுக்கு புதிய சந்தையை உருவாக்குகிறது . அது போலவே , கணினி , தொலைக்காட்சிப் பெட்டிகள் , குளிர் சாதனப் பெட்டிகள் , சலவை இயந்திரங்கள் , மோட்டார் வாகனங்கள் என நுகர்வுப் பொருட்கள் அனைத்திலும் புதிய புதிய மேம்பாடுகளைத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் கொண்டு வந்து முதலாளியம் தொடர்ந்த...