நன்கு நரைத்து வெளுத்த முடி , மழிக்கப்பட்ட முகம் , வெள்ளை முழுக்கைச் சட்டை , பாலியஸ்டர் இரட்டை மடிப்பு வேட்டி , சில நேரங்களில் மூட்டப்பட்ட வெள்ளை லுங்கி , எப்போதும் பார்த்த உடனேயே நம்மையும் தொற்றிக்கொள்ளும் சிரிப்பு , கொஞ்சம் கரகரத்த குரல் இவர்தான் என் . எஸ் . என்று தோழர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட நல்லசிவம் எனப்படும் தோழர் முகமது கனி என்னும் மா-லெ புரட்சியாளர். அடிப்படை நூல்களை வாசிக்கும் முறையை அவர் கற்றுக்கொடுப்பது அலாதியானது . கடினமான மார்க்சியச் சொல்லாடல்களைப் பொருள் விளக்கி , புரிந்துகொள்வதற்கு இலகுவாக மிகவும் எளிமையான முறையில் எடுத்துக் கூறுவார் . ‘ குடும்பம் , தனிச் சொத்து , அரசு ஆகியவற்றின் தோற்றம் ’, ‘ அரசும் புரட்சியும் ,’ ‘ கம்யூனிஸ்டு கட்சி அறிக்கை ’ ஆகிய நூல்களை தொடக்கநிலை ஆதரவாளர்களுக்கு அவரைப் போல் எளிமையாக யாரும் விளக்க முடியாது என்றே கூறலாம். . மூத்த தோழராக இருந்தபோதும் இளைஞர்களை அவர் வசப்படுத்தும் விதம் மெஸ்மெரிசம் போன்று இருக்கும் . இளம் தோழர்களை அவர்கள் அரசியல்ரீதியாகத் தயாராவதற்கு முன்பே முழுநேர அரசியலுக்கு உணர்வூட்டிக் கொண்டுவந்துவிடுவார் . புர...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்