இந்தியாவின் முன்னணித் தொழில் நகரங்களில் ஒன்றாகவும் , தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய மையமாகவும் விளங்கிவரும் ஒசூர் , பன்னாட்டு நிறுவனங்களின் கொடூர லாப வேட்டைக்கான பிரதானக் களமாக மாறிவருகிறது. கர்நாடகத் தலைநகரான பெங்களூருக்கு மிக அருகில் அமைந்ததன் காரணமாக , மூலப்பொருட்களைக் கொண்டு வருவதும் , உற்பத்திப் பொருட்களை உலகச் சந்தைக்கு அனுப்புவதும் பெருநிறுவனங்களுக்கு எளிதாகியுள்ளது. இங்கு பன்னாட்டு மற்றும் பெருநிறுவனங்க ள் , மற்றும் அவற்றுக்கு உதிரிப்பாகங்களை உற்பத்தி செய்யும் நூற்று க்கணக்கான குறு , சிறு மற்றும் நடுத்தரத் தொழிற் கூடங்க ள் ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் . தொழிற்துறை வளர்ச்சி மற்றும் முதலீடு பெருக்கம் ஆகியவற்றின் உண்மையான அடிப்படை காரணம் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும் , வறட்சியும் வேலையின்மையும் நிலவும் இந்தியாவின் பல்வேறு பின்தங்கிய மாநிலங்களிலிருந்தும் வந்து குவியும் ஏழைத் தொழிலாளர்களின் வியர்வையும் , இரத்தமும் , சிதைக்கப்பட்ட சதைகளுமே அடித்தள மாக உள்ளது . பெருநிறுவனங்கள் தங்களது லாப வரம்பை ஆண்டுதோறும் பன்மடங்கு உ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்