இடைவிடாத தொடர்ந்த போராட்டங்களாலும் கடினமான தியாகங்களாலும் ஆகஸ்ட் 15- ஆம் நாள் , 1947- இல் விதியுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டது, . 200 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கிலாந்தின் காலனியாக இருந்த இந்தியா , சுதந்திர நாடானது. அப்பொழுதிருந்து 77 ஆண்டுகளில் அனைத்து துறைகளிலும் உறுதியான முறையில் வேகமாக முன்னேறி வருகிறது என்னும் உண்மை பாராட்டுக்குரியது. எனினும் , தன்னுடைய சுதந்திரத்தின் உட்பரிமாணத்தையும் உண்மையான நிலைமைகளையும் அடைய இந்தியா இன்னும் கற்பனைக்கு எட்டாத தூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்னும் உண்மையை நாம் தாழ்மையுடன் ஒப்புக் கொள்ளவேண்டும்! அவர்கள் நீதி , சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் , பன்மைத்துவம் , ஒத்திசைவு , கண்ணியம் , நேர்மை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த சமூகத்துக்காக ஏங்குகிறார்கள்! இந்தியா அதன் ஜனநாயக விழுமியங்கள் மற்றும் அதன் சட்டகங்கள் அடித்து நொறுக்கப்படுவதில் இருந்து விடுதலை பெற கண்ணீர் வடிக்கின்றது. சுவீடனின் கோதென்பர்க் பல்கலைக்கழகத்தின் வி-டெம் நிறுவனத்தின் [ V--Dem Institute] ‘ 2024- ஆம் ஆண்டின் ஜனநாயகம் ' பற்றிய அறிக்கை
நடிகர் விஜய்யின் அரசியல் நுழைவும் விக்கிரவாண்டியில் 27.10.24 அன்று நடந்த அவருடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடும் இன்று தமிழ் நாடெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது . தமிழ் நாட்டில் உள்ள தொலைக்காட்சிகள் அந்த மாநாட்டையும் அதில் விஜய் ஆற்றிய நாடக பாணியிலான உரையையும் போட்டிபோட்டுக் கொண்டு காட்சிப் பொருளாக்கின . அதனைப் பற்றி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் விவாதங்களும் எதிர் விவாதங்களும் இன்னும் தொடர்கின்றன . ' மாநாட்டில் பல இலட்சம் பேர் கலந்துகொண்டனர் . பணம் கொடுத்து அழைத்து வராமல் தானாகச் சேர்ந்த கூட்டம் . இளைஞர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர் ' எனப் பத்திரிகைகள் எழுதி வருகின்றன . இவ்வாறு அனைத்து ஊடகங்களும் விஜய் பற்றியும் அவருடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகம் பற்றியுமான செய்திகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளன . சினிமா நடிகர் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்கு ஒரு புதிய செய்தியல்ல . எம் . ஜி . ஆர் ., ஜெயலலிதா , விஜயகாந்த் , சரத்கும