செப்டம்பர் 22ந் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பும் (NIA) அமலாக்கத் துறையும் போலிசும் இணைந்து இந்திய ஒன்றியம் முழுவதும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (popular Front of India), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், ஊழியர்கள் என 109 பேரைக் கைது செய்துள்ளது. மத வெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்துகின்றன; உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் மத வெறியையும் வன்முறை எண்ணங்களையும் உருவாக்குகின்றன; நாட்டுக்கு எதிராகச் சதி செய்கின்றன; அந்நிய நாடுகளிலிருந்து இரகசியமாகப் பணம் வாங்கி அதை நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்துகின்றன ஆகிய காரணங்களுக்காக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசின் புலனாய்வு நிறுவனமும் போலீசும் கூறுகின்றன. மத வெறுப்பைத் தூண்டுவது, மத அடிப்படையில் கலவரங்களைத் தூண்டுவது, தம்மைக் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளைக் கொலை செய்வது, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவது ஆகிய செயல்களில் ஆர்.எஸ்.எஸ்ஸும், சங்கப் பரிவாரங்களும் கூட ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தேசியப் புலானாய்வு நிறுவனமோ அமலாக்கத் துறையோ போலீசோ அந்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்