Skip to main content

Posts

Showing posts from May, 2020

தொழிலாளர்களைக் காவு கொள்ளும் இந்திய முதலாளி வர்க்கம்!

மோடி அரசாங்கம் 2014 ஆம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியைப் பிடித்ததிலிருந்து தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதகமாகத் திருத்துவதில் முனைப்பாக செயல்பட்டு வருகின்றது . அந்த வகையில் 44 தொழிலாளர் சட்டங்களை எளிமைப்படுத்துவதாகக் கூறி நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றி தொழிலாளர்களுக்கு இருந்த குறைந்தபட்சப் பாதுகாப்பு அம்சங்களையும் இல்லாமல் செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டு வருகின்றது . அதில் ஒரு பகுதியான ஊதிய சட்டத் தொகுப்பு மசோதா கடந்த 2019 ஆகஸ்டு மாதத்தில் நிறைவேற்றப்பட்டது . மற்ற மூன்று சட்டத் தொகுப்புகள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன . இந்நிலையில் கொரானா நோய்த்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்தித் தொழிலாளர் சட்டங்கள் என்பதே இல்லாமல் செய்வதற்கான வேலைகளில் இந்திய அரசும் மாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன . இந்த நெருக்கடியான காலத்தில் கோடிக்கணக்கான தொழிலாளர்களும் , உழைக்கும் மக்களும் வேலையின்றி , வருவாய் ஏதுமின்றி அடிப்படைத் தேவைகளுக்கே துன்பப்பட்டு வருவது குறித்து அரசு எந்தக் கவலையும் கொள்ளவ