நீம் ( NEEM - National Employment Enhancement Mission) திட்டம் கடந்த 2013-ல் காங்கிரஸ் அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. 2017ல் பாரதிய ஜனதா அரசு அதில் பல மாற்றங்களைச் செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. பள்ளி, கல்லூரி படிப்பை முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்குத் தேவையான தொழில்நுட்பத் திறன் இல்லை என்றும், அதனால் அவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை என்றும், ஆகையால் அவர்களுக்கு தேவையான தொழில்நுட்பத் திறனை வழங்கி அதன் மூலம் அவர்களை வேலைக்குத் தயார் செய்வதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. அதற்காக படித்து முடித்து விட்டு வரும் இளைஞர்களுக்கு நிறுவனங்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்க வேண்டும் என இத்திட்டம் கூறுகிறது. உண்மையில் இந்தத் திட்டம் இளைஞர்களின் வேலை இல்லாத் திண்டாட்டத்தைப் போக்குகிறதா? உண்மையில் இளைஞர்களின் நலன் மீது இந்த அரசுக்கு அக்கறை இருந்திருந்தால் படிக்கும் காலத்திலேயே கல்வி தகுதிக்கேற்ப தொழில்நுட்பப் பயிற்சி அளித்து அவர்களை வேலைக்குத் தயார்படுத்தியிருக்க வேண்ட
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்