கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும் அரசுக்கும் முதலாளிய வர்க்கத்திற்கும்தான் உண்டு!
கொரோனாப் பெருந்தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மக்களை வேகமாகப் பாதித்து வருகின்றது . நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வசதியில்லாமல் கொத்துக்கொத்தாக உயிரிழக்கும் அவல நிலை நாடெங்கிலும் தலை விரித்தாடுகிறது . அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவக் கட்டமைப்புகள் இல்லாததாலும் , ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் போதுமான அளவு இல்லாததாலும் மருத்துவமனையின் தரைகளிலும் வளாகங்களிலும் எண்ணற்ற நோயாளிகள் மருத்துவத்திற்காகக் காத்துக் கிடக்கின்றனர் . பெரும்பாலான நோயாளிகள் உரிய சிகிச்சை பெற முடியாமல் பரிதாபமாக இறந்து போகின்றனர் . ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் ஆம்புலன்சுகளிலும் , ஆட்டோவிலும் உட்கார்ந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு வெளியே காத்துக் கிடக்கின்றனர் . பெரும் தேடலுக்கும் , காத்திருப்புகளுக்கும் பின்னர் சிலருக்கு மட்டுமே ஆக்சிஜன் வாயு கிடைக்கிறது . எத்தனை பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர் என்ற உண்மை விவரங்கள் மறைக்கப்படுகின்றன . மின் மயானங்களில் பிணங்கள் எரிப்பதற்காக வரிசையில்