தேர்தல் காலம் - சந்தையின் பார்வையில் மனிதர்கள் சரக்குகளாக மாறிவிட்டதைப் போல , தேர்தல் ( கட்சிகளின் ) பார்வையில் அவர்கள் வாக்குகளாக மாறிப்போனதையும் , அவற்றை எப்படியெல்லாம் அறுவடை செய்வது என்று கட்சிகள் பரபரப்பில் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது . பொருளுற்பத்தியில் அனைத்தையும் பணமாகப் பார்க்கும் ஆளும் வர்க்கம் , அரசியலில் மனிதர்களை வாக்குகளாக நோக்கும் பார்வையை தனது காவலாளியான கட்சிகளுக்குக் ( ஆளும் , எதிர்க் கட்சிகள் ) கையளித்திருக்கிறது . வாக்களிப்பது ஜனநாயகக் கடைமை ; உயிரோடு இருப்பதற்கான ஒற்றை சாட்சியம் ; வாக்கு செலுத்துவதை புறக்கணிப்பது மனிதத்தன்மையற்றவர்களின் செயல் ; அப்படியான செயல் தீவிரவாதமாக இணைவைக்கப்படும் என்றெல்லாம் வேண்டிக்கேட்பதும் , அறம் பாடுவதும் ; அச்சப்படுத்துவதும் தொடர்கிறது - அச்சு று த்துவது ஜனநாயகமல்ல என்பதைகூட அறியாமல் . வழக்கத்துக்கு மாறாக இந்தத் தேர்தலில் முக்கியமான நிரலாக முன்வந்திருப்பது பாசிசமும் , பாசிச எதிர்ப்பும் . களத்தில் எதிரும் , புதிருமான இரண்டு அணிகள் ; மற்றவை அவற்றின் மறைமுகங்கள் ( பி டீ
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்