Skip to main content

Posts

Showing posts from January, 2026

மக்களின் பாதுகாப்புக்கு எதிரான புதிய அணு ஆற்றல் சட்டம்!

  இந்தியாவை மாற்றி அமைப்பதற்காக அணு ஆற்றலின் நீடித்த பயன்பாட்டுக்கும் மேம்பாட்டுக்குமான சட்டம் (Sustainable Harnessing and Aarancement of Nuclear Energy for Transforming India - SHANTI) 2025 (சாந்தி) என்ற புதிய மசோதா ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் பாராளுமன்றத்தில் , பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில் நிறைவேற்றப்பட்டுள்ளது ; இந்த மசோதா முறைப்படி பாராளுமன்றத்தின் நிலைக் குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பப்படாமல் , விஞ்ஞானிகள் , சுற்றுச்சூழல் நிபுணர்கள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலேயே மத்தியில் ஆளும் பாஜகவால் வழக்கம் போல நிறைவேற்றப்பட்டுள்ளது.   நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டம்   இந்தச் சட்டம் இந்தியாவின் அணுசக்தித் துறையை தனியார் முதலீடுகளின் மூலம் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது ; அணுசக்தி துறையின் ஒவ்வொரு பிரிவையும் தனியார்மயமாக்க ம்  ஊக்குவிக்கிறது ; மக்களுக்கான பாதுகாப்பு விதிகளைப் புறந்தள்ளி நீர்த்துப் போகச் செய்துள்ளது. முன்னேற்றம் என்ற போலியான முகத் திரையுடன் இந்தச் சட்டம் மக்கள் பாதுகாப்பையும் தேசப் பாதுகாப்பையும் மற்றும் இந்த...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...