Skip to main content

Posts

Showing posts from December, 2022

அடையாளப் போராட்டங்களும் அரசியல் நீக்கமும்!

போராட்டங்களில் என்ன அடையாளப் போராட்டங்கள் ? போராட்டங்களைப் பொருளாதாரப் போராட்டங்களாகக் குறுக்கிவிடுவதும் , சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கானவையாக மாற்றீடு செய்வதும் , தெளிவான அரசியல் போராட்டங்களாக அதைப் பரிணமிக்க விடாமல் பார்த்துக் கொள்வதும், பெயரளவுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதுடன் திருப்தி அடைவதும் தான் அடையாளப் போராட்டங்கள் .  இவை ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பது போல் போக்குக் காட்டி , அதை ஆதரிக்கும் அடையாளப் போராட்டமாக வடிவமெடுத்து வர்க்க எதிர்ப்புச் சாரத்தைப் பேரிழப்புக்கு உள்ளாக்கும் . மிகத் தெளிவாகத் தெரியும் வர்க்க அரசியலைக் கைவிட்டுவிட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்ன வகையான போராட்டத்தை முன்னெடுத்தாலும் , அவை வர்க்கக் காட்டிக் கொடுத்தல்களுக்கு தான் இட்டுச் செல்லும் . தொலைநோக்கோடு கூடிய , தத்துவார்த்த அடித்தளத்தோடு இணைந்த , அதிகார மாற்றத்திற்கான பொருளாதாரப் போராட்டங்களும் , அரசியல் , கலாச்சாரப் போராட்டங்களும் தான் வர்க்கப் போராட்டங்கள் . வர்க்க உணர்வோடு கூடிய இந்தப் போராட்டங்கள் பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல் வர்க்க அதிகாரத்திற்காக நீள்கிறது . ஆளும் வர்க்கத்துக்கு எதிரா

பாசிசத்தின் மீதான தீர்மானம்

  கி ளாராஜெட்கினால் எழுதப்பட்ட இந்தத் தீர்மானம் கம்யூனிச அகிலத்தின் செயற்குழுவின் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் பிளீனத்தால் ( பேரவையினால் ) 23 ஜூன் 1923 ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது . இது பாசிசத்தை எதிர்த்து : எவ்வாறு போராடுவது மற்றும் எவ்வாறு வெற்றி பெறுவது ( ஹேமார்க்கெட்புக்ஸ் , 2017) என்னும் மிக் டேபர் (Mike Taber) மற்றும் ஜான் ரிடல் (John Riddell) தொகுப்புகளிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டது .  - - - -   பாசிசம் என்பது தகர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரம் மற்றும் சிதைந்து வரும் முதலாளித்துவ அரசின் வெளிப்பாடாகும் . இ து இந்தக் காலகட்டத்தில் வீழ்ச்சியின் தனிச் சிறப்பான அறிகுறியாகும் . எல்லாவற்றிற்கும் மேலாகப் பாசிசம் என்பது ஏகாதிபத்தியப் போரின் தாக்கம் மற்றும் விரைவாகவும் , அதிகரித்த அளவிலும் நிலைகுலைந்து வரும் முதலாளித்துவப் பொருளாதாரம் , பரந்த அடுக்கினரான சிறு மற்றும் நடுத்தர முதலாளிகள், சிறு விவசாயிகள் மற்றும் “அறிவுஜீவிகள்” மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்திலும் வேர் கொண்டுள்ளது. இந்தப் போக்கானது , இந்த அடுக்கினரின் பழைய வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அவர