அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது ; தொழிலாளர்கள் , விவசாயிகள் , வணிகர்கள், முதலாளிகள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லோருக்கும் மேலானது ; அந்தந்த நாட்டின் அரசுகள் தான் எல்லாவற்றையும் , எல்லோரையும் கட்டுப்படுத்தி எதுவும் வரம்பு மீறாமல் சமூகத்தை இயல்பு நிலையில் வழி நடத்துகின்றது ; வெளியிலிருந்து வரும் பொருட்களையும் , மூலதனத்தையும் நிர்வகித்துச் சொந்த நாட்டு இறையாண்மையைப் பேணுகிறது. இதற்காகவே இறக்குமதி , ஏற்றுமதித் தீர்வைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தி , வினியோகத்தில் சமன்பாட்டை உருவாக்குகிறது ; நாடுகளுக்கிடையேயான உறவைப் பேணி ஒத்திசைவான சூழலை உருவாக்குகிறது ; இயற்கை வளங்களையும் , சுற்றுச்சூழலையும் நெறியாள்கை செய்து சமூகப் பாதுகாப்புக்கு அரணாக நிற்கிறது ; அரசு நிர்வகிக்கும் அனைத்துத் துறைகளின் சொத்துக்களும் மக்கள் அனைவரின் உடைமை எனும் பொருளில் பொதுச் சொத்துக்கள் எனப்படுகிறது . மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்துபோன கருத்துக்கள் . உண்மையில் அரசு இப்படித்தான் இருக்கிறதா ? எல்லோருக்குமாகத் தான் அரசு இயங்குகிறதா ? அரசின் நீதி , நிர்வாகத் துறை
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்