கொரானா பேரிடரினால் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. தங்களை வளர்ந்த நாடுகள், நாகரிகமடைந்த நாடுகள், தன்னிறைவு பெற்ற நாடுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஏகாதிபத்திய நாடுகளின் இந்தக் கதையாடல்கள் எல்லாம் தவிடுபொடியாகிப் பொருளாதாரத்தில் பெரும் சரிவு ஏற்பட்டு வருகிறது. உற்பத்தியும் விநியோகமும் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து மீள முதலாளித்துவ அரசுகளால் அறிவிக்கப்பட்ட சலுகைகளின் பெரும்பகுதி சுரண்டும் வர்க்கங்களின் இலாபத்தை ஈடுகட்டுவதற்கு வழங்கப்பட்டுள்ளதே தவிர, தங்கள் வருவாய் இழந்து, அன்றாடத் தேவைகளுக்கு அல்லல்படும் மக்களுக்கோ, பட்டினி கிடந்து சாகும் மக்களுக்கோ சொற்பமான அளவையே அளித்துள்ளது. அரசிடம் சலுகைகள் பெற்ற முதலாளிகளோ, வேலைவாய்ப்பைப் பெருக்கி, கூலியை உறுதிப்படுத்திப் பொருளாதார நெருக்கடியைச் சரி செய்வதற்கு எந்தவித முயற்சியையும் செய்யாமல், அதனைத் தங்களுக்கான வருவாயாகச் சுருட்டிப் பையில் வைத்துக் கொண்டனர். இதனால் சாதாரண அடித்தட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றனர். உலகளாவிய அளவில் ஏற்பட்டுள
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்