வங்காளதேசத்தின் பிரதமர் நாட்டை விட்டுத் தப்பியோடும் வரையில் , மேற்கத்திய ஊடகங்களும் , சர்வதேச நிதி நிறுவனங்களும் அந்த நாடு பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறி வருவதாகப் பிரச்சாரம் செய்து வந்தன . அப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் மக்கள் ஏன் வீதிக்கு வந்து இத்துணைப் பெரிய போரட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும் ? அதுவும் அரசு பணிகளில் இடஓதுக்கீடு சம்பந்தமான பிரச்சனை அதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோருக்கும் எழுகின்றது . வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவிரைவில் டென்மார்க்கையும் , சிங்கப்பூரையும் விஞ்சிவிடும் என்றும் , தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் அளவானது இந்தியாவைவிட அதிகமாக உள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம் ஆருடம் உரைத்தது . வங்காளதேச அரசின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அதன் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.6% என்ற அளவில் உள்ளது . குறைந்த கூலிக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பால் அபரிமிதமான இலாபம் ஈட்டிவரும் ஆயத்த ஆடை உற்பத்தியானது உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் கொண்டு இந்த வளர்ச்சி காட்டப
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்