அண்மையில் செப்டம்பர் 21 ல் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா ( மக்கள் விடுதலை முன்னணி ) கட்சியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயகா தேசிய மக்கள் சக்தி என்ற அணி சார்பில் நின்று ' வெற்றி பெற்று அதிபராகி உள்ளார் . இவரது வெற்றியை ' இடதுசாரி அரசு மலர்ந்தது ' என இ . பொ . க . ( மா ) கட்சியின் இதழ் தீக்கதிர் குறிப்பிடுகிறது . மேலும் ' அரிவாள் - சுத்தி பொறிக்கப்பட்ட செங்கொடிகளை ஏந்தி இலங்கையில் மக்கள் அவரது வெற்றியைத் கொண்டாடி வருகின்றனர் ' எனவும் அந்த இதழ் குறிப்பிடுகிறது . தீக்கதிர் மட்டும் அல்ல பலரும் திசாநாயகாவின் வெற்றியை ஒரு புரட்சிகரக் கட்சி ஆட்சிக்கு வந்தது போல வரவேற்று மகிழ்ச்சி அடைகின்றனர் . இதே திசாநாயகா 2019 ல் நடந்த அதிபர் தேர்தலில் 3% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார் . ஆனால் இப்பொழுது நடந்த தேர்தலில் முதல் சுற்றில் 42.3% வாக்குகள் பெற்றிருந்த அவர் இரண்டாவது சுற்றில் முன்னுரிமை வாக்குகள் அப்படையில் 55.89% வாக்குகள் பெற்று அதிபராகி உள்ளார் . இது எப்படி
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்