ஊசி துளைக்கப்பட்ட கரங்கள் அவள் கரங்களின் சித்திரவேலைப் பின்னலில் பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன அழுக்கடைந்த சிறிய இருட்டறையில் ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும் அவளுடைய தோல் போர்த்திய கரங்களால் ஆடைகளில் உயிர்பெற்று மின்னின. குவிந்து கிடந்த நூற்கண்டுகள் அவளுடைய ஊசி துளைத்த விரல்களால் இரவின் ஒளியில் மின்மினிகளாய் துணிமணிகளில் மாயம் புரிந்தன கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது அவளது காய்த்துப் போன கரங்களால் அவள் படைத்த மெல்லிய அலங்கார ஆடைகளை அணியும் பேறு அவளுக்கில்லை என்பது அவளுக்குத் தெரியும் அனைத்து வலிகளும் உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும் உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின் ஆற்றல் போல் வருவதில்லை சில வலிகள் நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில் உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது. பளிச்சிடும் வண்ண ஆடைகள் வடிவத்திலும் வரும். மகிழ்ச்சியற்ற கொண்டாட்டம் அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள் இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள் படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில் அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள் ஆனால் அவர்கள
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்