Skip to main content

Posts

Showing posts from December, 2025

இலாப வெறி முதலாளியத்திற்கு முடிவு கட்டும்!

  2005ல் கொண்டு வரப்பட்ட ‘மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப்’ பதிலாக ‘வளர்ந்த இந்தியாவிற்கான ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் அளிக்கும் திட்டம் (Viksik Bharath Gurantee for Rozgar and Ajeevika Mission Gramin)’ என்னும் சட்டத்தை அவசர அவசரமாக டிசம்பர் 18 ந்தேதி எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பாஜக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. 2005ல் கொண்டு வரப்பட்ட திட்டம் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலைக்கான உரிமை என்ற கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் முதலாளியப் பொருளாதார அமைப்பின் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்பதுதான் உண்மையாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளிலிருந்து முதலாளிய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்து வரும் புதிய தாராளவாதக் கொள்கை சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வை உருவாக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத வளர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் மூலதனச் செறிவு கொண்ட தொழிற்சாலைகள...

செவிலியர்கள் போராட்டமும், செவி சாய்க்காத திமுக அரசும்!

  கொரோனா முதல் மழைக்காலம் , விபத்து , மகப்பேறு வரை வாழ்க்கையின் எல்லா எல்லைகளிலும் உயிர் காக்கும் முன் வரிசைப் பணியாளர்கள் செவிலியர்கள் . அவர்கள் தினமும் நோயாளியின் உயிருக்கும் மரணத்துக்கும் நடுவே நின்று வேலை செய்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் , வேலைஉறுதி , நலன்கள் , மரியாதை – இவற்றைப் பார்த்தால் அவர்களின் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் தெளிவாக வெளிப்படுகின்றது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதியம் அடிப்படையிலும் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர் . 8 முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தரம் இல்லாமல் , குறைந்த சம்பளத்தில் , அதிகப் பணிச்சுமையோடு அரசு மருத்துவமனைகளில் சேவை செய்து வருக்கின்றனர் . விரிவடைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் , புதிய மருத்துவமனைகள் , மல்டி – ஸ்பெஷாலிட்டி மையங்கள் – எல்லாவற்றிற்கும் முதுகெலும்பாக இருப்பது இந்தச் செவிலியர்களே ; ஆனால் அவர்கள் வாழ்க்கை மட்டும் நிச்சயமற்றதாகவே உள்ளது . பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி மாறி மாறி மாநில அரசின் ஆட்சிக் கட்டில...

இலஞ்சத்தின் மீதும் ஊழலின் மீதும் கட்டமைக்கப்பட்டுள்ள முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி

  ஊழலற்ற ஆட்சியை நடத்தி வருவதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பாஜக கட்சி 2024-2025 நிதி ஆண்டில் மட்டும் முதலாளிகளிடமிருந்து 6088 கோடி ரூபாய்களை தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. 2023-2024 நிதி ஆண்டில் அது முதலாளிகளிடமிருந்து பெற்ற தேர்தல் நிதி 3967 கோடி ரூபாய்கள். தேர்தல் பத்திரம் மூலம் நிதி வசூலிப்பது சட்ட விரோதமானது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் தேர்தல் அறக் கட்டளைகள் என்ற அமைப்புகளின் மூலம் முதலாளிகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்து வருகின்றனர். அவை மட்டுமல்லாமல் தனி நபர்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்று வருகின்றன. 2023-2024 நிதி ஆண்டில் 1129 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி 2024-2025 நிதி ஆண்டில் 522.13 கோடி ரூபாயைத் தேர்தல் நிதியாகப் பெற்றுள்ளது. இதை விட 12 மடங்கு அதிகமாக பாஜக பெற்றுள்ளது. ஆட்சியில் உள்ள கட்சிக்குத் தேர்தல் நிதி அளிப்பதன் மூலம்தானே முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிக்கும் ஒப்பந்தங்களையும் இலட்சக்கணக்கான ரூபாய் மானியங்களையும் அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். முதலாளிகளிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக் ...

வெனிசுலாவைக் குறி வைக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை மக்கள் முறியடிப்பார்கள்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ தென் அமெரிக்க நாடுகளில் குறிப்பிடத்தக்க இடதுசாரி தலைவர் ; இவரது ஆட்சியில் வெனிசுலாவின் பொருளாதாரம் ஏறக்குறைய முழுமையாக சிதைந்துள்ளது; இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாய் நாட்டை விட்டுப் பிற நாடுகளுக்கு அகதிகளாக ஓடினார்கள். என்றாலும் உலக வரலாற்றை உன்னிப்பாகக் கவனித்தால் அமெரிக்காவை மனிதநேயமிக்க நாடாகக் கருத எந்த அடிப்படையும் இல்லை. வெனிசுவேலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்ற வேண்டும்; அதற்குத் தடையாக இருக்கும் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்த்துத் தனக்கு ஏவல் செய்யும் ஒரு பொம்மை அரசை அங்கு ஆட்சியில் அமர்த்த வேண்டும். இந்த நோக்கத்துடன் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை , அந்த நாட்டிலிருந்து பிற நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யவிடாமல் சுற்றி வளைத்தல் ஆகியவையே வெனிசுலாவின் பொருளாதாரச் சிதைவுக்கு முக்கியமான காரணங்களாகும்.     அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளான ஜெர்மனி , பிரிட்டன் , போலந்து , நெதர்லாந்து உட்பட்ட 23 ஐரோப்பிய நாடுகளும் வெனிசுலாவின் ஜுவன் கைடோவை , மதுரோவுக்கு எதிராக அவரை அழித்தொழிக்க , அந்த நாட்டின் தலைவராக 20.01.2017 ம...