இந்திய அரசின் தொழிலாளர் விரோத , மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக 10 க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்களின் சார்பில் நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலை நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது . கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் பொது வேலைநிறுத்தம் வெறும் சடங்குத்தனமாகவே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது . பல ஆண்டுகளாகப் பொதுக் கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப் பெறும் இந்த வேலைநிறுத்தங்கள் ஆளும்வர்கக்கங்களையோ அல்லது அதற்குத் துணை நிற்கும் அரசாங்கத்தையோ சிறிதும் அசைக்க முடியவில்லை . ஆட்சியாளர்கள் அதைச் சிறிதும் சட்டை செய்வதில்லை. போதுமான தயாரிப்புகள் இல்லாமல் , முறையான பிரச்சாரங்கள் இல்லாமல் , பரந்துபட்ட அளவில் தொழிலாளர்களை அணி திரட்டாமல் , மேம்போக்கான அறிவித்தல்களின் மூலம் , பெயரளவில்தான் தொழிலாளர்கள் அணி திரட்டப்படுகின்றனர். தொழிலாளர்களிடம் ஆளும் முதலாளிய வர்க்கத்தைப் பற்றியும், அதன் சுரண்டலுக்கு ஆதரவான அரசின் சட்டங்களைப் பற்றியும் விரிவான முறையில் பிரச்சாரம் செய்யப்படாததால் அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வும் அரசியல் உணர்வும் மிகக
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்