Skip to main content

Posts

Showing posts from June, 2021

ஜார்ஜ் ப்ளாய்டும் - இடையப்பட்டி முருகேசனும்

   நேற்று (23.6.2021) சேலம் மாவட்டம் இடையப்பட்டி முருகேசனும் அவருடையை இரண்டு நண்பர்களும் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பி வரும் பொழுது அவர்களைப் பிடித்த  உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவர் முருகேசன் மீது கண் முடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். அதனால் முருகேசன் உயிர் இழந்துள்ளார்.             முருகேன்   மீது   வெறித்தனமாக   லத்தியைக்   கொண்டு தாக்கிய பொழுது ' சார் , சார் , அடிக்காதீங்க விடுங்க, சார் ' என அவர் கெஞ்சுவதைக் காணொளியில் காணமுடிகிறது . ஆனால் , அவர் அடி தாங்க முடியாமல் வலியால் கதறுவதையும்     பொருட்படுத்தாமல், ஈவு இரக்கம் சிறிதும் இல்லாமல் அவர் உயிர் போகும் அளவுக்கு அந்த அதிகார வெறி கொண்ட உதவி ஆய்வாளர்   தாக்கியுள்ளார்.                இந்தக் காணொளி அமெரிக்க போலிஸ் அதிகாரி கருப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட்டின் மீது நடத்திய   கொடூரமான தாக்குதலை நமக்கு நினைவுபடுத்துகிறது . அப்பொழுது   ஜார்ஜ் பிளாய்ட் , ' என்னால் மூச்சு விட முடியவில்லை , ப்ளீஸ் , ப்ளீஸ் ' எனத் தொடர்ந்து   சொல்லிக் கொண்டே இருக்கிறார் .   ஆனால் ,   எட்டு நிமிடங்களுக்கும் மேல

நீட் (NEET) தேர்வை ஒழித்து விட்டால் அடித்தட்டு ஏழை மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி கிடைத்து விடுமா?

தமிழகத்தில் நீட் (NEET) நுழைவுத் தேர்வு இரத்து செய்வது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ . கே . இராசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது . நீட் நுழைவுத் தேர்வின் காரணமாக தமிழக மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பெறமுடியாமல் பாதிக்கப்பட்டு வருவதாகவும் , நீட் தேர்வை ஒழித்துக்கட்டி தமிழக மாணவர்களுக்கு மருத்துவம் பயில்வதற்கான வாய்ப்புகளை மீட்டெடுக்கவேண்டும் என்றும் பிரச்சாரங்கள் முதலாளித்துவக்கட்சிகளாலும் , முற்போக்காளர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலராலும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன. நீட் நுழைவுத் தேர்விற்குப் பிறகு   தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதில் என்ன விதமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன ? அதற்கு முன்பு நிலைமை எப்படி இருந்தது? அதனுடைய அடிப்படையான காரணங்கள் என்னென்ன என்பதனைப் பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாமல் நீட் தேர்வு தமிழக மாணவர்களை வஞ்சிக்கிறது எனக் கூறி மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது . வசதி படைத்தவர்களுக்கே மருத்துவக் கல்வி! நீட் தேர்வு மட்டுமல்லாமல் , இதற்கு முன்பான தேர்வு முறையும் கூட தனியார் பள்ளிகளில் படித்த, வசதி படை