கொரானா பெரும்தொற்று இன்று இந்திய ஒன்றியத்தைச் சுனாமி போலத் தாக்கி வருகிறது. தினந்தோறும் மூன்று இலட்சம் பேருக்கு மேல் புதியதாகத் தொற்று ஏற்பட்டு வருகிறது. இன்னும் பன்மடங்கு தொற்று அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தொற்று ஏற்பட்டதிலிருந்து இது வரையிலும் இரண்டு இலட்சம் மக்கள் கொரானாவிற்குப் பலியாகி உள்ளனர். இந்தக் கொடூரமான அவலங்களுக்குக் காரணாமான மோடியின் அரசு, ‘வருங்காலத்தில் நிலைமை இன்னும் மோசமாகும்.அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்’ எனக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இரண்டாவது அலை பற்றிய எச்சரிக்கையும் மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளும்! கடந்த ஆண்டு செப்டம்பர் மாத வாக்கிலேயே கொரானாத் தாக்குதலின் இரண்டாவது அலை வரும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் எச்சரித்தனர். அதை எதிர் கொள்ளும் வகையில் அரசு முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும் எனக் கோரினர். ஆனால் மோடியும் அவருடைய துதிபாடிகளும் கொரானாவை இந்தியா வெற்றி கொண்ட விதம் குறித்து உலக நாடுகள் அனைத்தும் பாராட்டி வருவதாக நம் மக்களிடம் பொய்ப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டனரே தவிர மருத
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்