பயங்கரவாதம் என்பது வன்முறைச் செயலாகும் --- அது பெரும்பாலும் அரசியல் ரீதியா ன அல்லது ஒரு கருத்தியல் ரீதியான நோக்கத்துடன் அப்பாவி மக்களை த் துன்புறுத்தும் செயலாகும். இதன் அடிப்படையில் அமேசான் நிறுவனம் கனடாவின் குவெபெக் நகரத்திலிருந்த தனது இருப்புக் கிடங்கு ஒன்றில் தொழிற்சங்கம் உருவாவதை த் தடுப்பதற்காக அங்கிருந்த தனது 7 இருப்புக் கிடங்குகளையும் மூடியது ஒரு பொருளாதார வன்முறை ச் செயலாகும். இதனால் வேலை இழக்கும் 1700 தொழிலாளர்களின் வாழ்க்கை மிக மோசமாக ச் சீரழியும் ; சிலர் இதிலிருந்து எப்பொழுதுமே மீண்டு வர மாட்டார்கள். இந்த வேதனை அவர்களது குடும்பம் மற்றும் அவர்களது சமூகம் முழுவதையும் பாதிக்கும் ஒன்றாகும். இந்த க் கிடங்குகளை மூடுவதற்கு இட்டுச் சென்ற தொடர் நிகழ்வுகளில் இந்த த் தொழிலாளர்களின் பங்கு ஒன்றும் இல்லை. லாவல் நகரத்தில் இருந்த ஒரு கிடங்கில் 2024- ஆம் ஆண்டில் தொழிற்சங்கம் சட்டரீதியாக அமைக்கப்பட்டது. மற்ற ஆறு கிடங் கு களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் இதில் இணையவில்லை என்றாலும் தொழிற்சங்கத்தை உடைத்து நொறுக்கும் அமேசான் நிறுவனத்தின் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தங்களை ச் ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்