சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எவர்கிரேண்ட் 300 பில்லியன் டாலர் கடனை (வங்கி, கடன் பத்திரங்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு) திரும்ப செலுத்த இயலாமல் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன்களை முதலீடுகளாகவும், முதலீடுகளைக் கடன்களாகவும் மீண்டும் மீண்டும் சுழற்சி செய்வதன் மூலமும், சொத்தின் மதிப்பை மிகைப்படுத்துவதன் மூலமும் இத்தகைய நெருக்கடிகள் தோன்றுகின்றன. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் பொழுது லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி சந்தித்த சிக்கல்களைப் போன்றும், 1990களில் ஜப்பானில் ஏற்பட்ட கட்டுமானத்துறை நெருக்கடி போன்றும் இந்த நெருக்கடி உள்ளதாக முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நெருக்கடி கட்டுமானத் துறையில் ஏராளமான வேலை இழப்புகளை ஏற்படுத்துவதோடு , கட்டுமானத் துறையானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தைக் கொண்டிருப்பதால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது . ஆர்டோஸ் நகரத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிகள் , கடைகள் , பெரிய மால்கள் , பெரிய அரங்கங்கள் ஆகியவை
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்