மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாநில மாநாடு ஜனவரி 3 முதல் 5 ந் தேதி வரை விழுப்புரத்தில் நடைபெற்றது . இந்த மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே . பாலகிருஷ்ணன் அவர்கள் , ‘ ஆர்ப்பாட்டம் , பேரணி , பொதுகூட்டம் ஆகியவற்றிற்கு கூட தமிழக காவல்துறை அனுமதி மறுக்கின்றது . போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது வழக்குகள் போடப்படுகின்றன, காவல்துறை கட்டுப்பாடில்லாமல் செயல்படுகின்றது . தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி விட்டீர்களா?’ என்று திமுக அரசை நோக்கி கேள்வி எழுப்பினார் . எனினும் அதே கூட்டத்தில் பாஜக , ஆர்.எஸ்.எஸ்-ஐ வீழ்த்தும் போராட்டத்தில் திமுகவோடு இருப்போம் என்றும் அறிவித்தார் . இந்திய முதலாளி வர்க்கம் நீண்ட காலமாக நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றது. மக்களின் வரிப் பணத்தை சலுகைகளாக ஏப்பம் விடுவது, வங்கிகளில் பெற்ற கடன்களைக் கட்டாமல் விலக்கு பெறுவது, வரிச்சலுகைகள் எனப் பல்வேறு சீர்த்திருத்தங்களின் மூலம் நெருக்கடியிலிருந்து மீள முயற்சி செய்து வருகின்றது. மேலும் உழைப்புச் சுரண...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்