மெய்தி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மாநில அரசிற்கு உத்திரவிடக் கோரி மெய்தி பழங்குடியினச் சங்கம் என்னும் அமைப்பின் சார்பில் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மெய்தி சமூகத்தைப் பாதுகாக்கவும் , மூதாதையர்களின் நிலம் , கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கவும் இதனைச் செயல்படுத்த வேண்டும் என கோரி வழக்கைத் தொடுத்தனர். மெய்தி இனமக்கள் தங்கள் முன்னோர்களின் நிலங்களிலிருந்து ஒதுக்கப்படுவதாக நினைக்கின்றனர். மெய்தி இனக்குழுவை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்குமாறும் , நான்கு வார காலத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மீதான அரசின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மார்ச் 7 ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. இந்த உத்திரவுதான் மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைந்தது. மெய்தி இனக்குழுவை பழங்குடிகள் பட்டியலில் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி மே 3 ஆம் தேதியன்று பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியை குக்கி , நாகா பழங்குடிகள் அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து நடத்தினர
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்