Skip to main content

Posts

Showing posts from January, 2022

இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் மக்கள் முன் உள்ள கடமையும்!

கொரானாப் பெருந்தொற்று பெரும்பாலான நாடுகளைக் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி வரும் சூழலில் , ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாடுகளில் இதன் பாதிப்புகள் மிக அதிகளவில் உள்ளன. தொழிலாளர்களும் , ஏழை விவசாயிகளும் , விவசாயக் கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் . இந்த நிலையில் ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் பேரளவில் மனித உயிர்களையும் , பொருளாதார இழப்புகளையும் சந்தித்திருந்த இலங்கை அரசு இன்று பெரும் கடனாளி நாடாகியுள்ளது . அதன் வருவாய்க்கு முக்கிய பங்காற்றுவது சுற்றுலாத்துறை ; அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்து வரும் நிலையில் , இந்த வருவாய் ஆதாரமும் கொரானாப் பெருந்தொற்றின் காரணமாக தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது . விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே நடந்த உள்நாட்டுப் போரில் ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காகப் பெரும் அளவில் அந்நிய நாடுகளிடமிருந்து இலங்கை அரசு கடன் பெற்ற