நாம் மிக மிக அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுயநலம் கொண்ட சிறு கும்பலின் ஆட்சி மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு எதிராக நம்முடைய ஜனநாயகத்தை ப் பாதுகாக்க நாம் துணிவு கொண்டிருந்தோமா என்பதை வருங்காலத்தில் நமது சந்ததியினர் நினைவு கூர்வார்கள். கெட்டிஸ்பர் க் கில் 1863--- ஆம் ஆண்டு , அடிமை முறைக்கு எதிராக போராடி ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர் நீத்த போர்க்களத்தில் , " இந்த தேசம், கடவுளின் கீழ், ஒரு புதிய சுதந்திர பூமியாக உருவாகும் --- மக்களுடைய மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இந்த பூமியில் மடிந்து போகாது" என்று முழங்கிய அமெரிக்காவின் அதிபர் ஆபிரகாம் லிங்க ன் பக்கம் நாம் நின்றோமா என்பதை அ வர்கள் நினைவு கூர்வார்கள். நாம் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த லிங்கனின் கனவின் பக்கம் நிற்கப் போகிறோமா, இல்லை, இந்த நாட்டில் கோடீஸ்வர்களுடைய, கோடீஸ்வரர்களுக்காக, கோடீஸ்வரர்களால் ஆன ஒரு அரசாங்கம் அமைவதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? ஆனால் சிறு கும்பல் ஆட்சி பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதாது. உண்மையில் அமெரிக்காவில் மூன்று மிகப்பெரிய பணக...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்