கடந்த ஜூலை 9 ஆம் தேதி காங்கிரசு தலைமையிலான கர்நாடக அரசு கிக் தொழிலாளர்களுக்கான மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூலை 2023 இல் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்ட இயங்கு தளம் (Platform) அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் சட்டம் ( பதிவு மற்றும் நலன் ) 2023 ஐ (The Rajasthan Platform Based Gig Workers (Registration and Welfare) Act, 2023) போன்றே இதுவும் அமைந்துள்ளது . ஆன்லைன் செயலியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்களான சொமோட்டோ , ஸ்விக்கி , பிக் பேஸ்கட் அமேசான் , பிளிப்கார்ட் , ஒலா , உபேர் , ஸெப்டோ , ப்ளின்கிட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சட்டமாகும் இது . பாரம்பரிய முறையில் முதலாளி தொழிலாளி உறவு என்ற அடிப்படையில் இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களை கிக் தொழிலாளர்கள் அல்லது பிளாட்பார்ம் தொழிலாளர்கள் என இது கூறுகின்றது . கிக் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்கும் ஆன்லைன் செயலி முதலாளிகள் , தாம் உற்பத்தியாளர் அல்லது சேவைய
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்