முப்படைகளுக்கும் ஆட்களைத் தேர்ந்தெடுப்பதற்காக “அக்கினிப் பாதை” என்ற புதிய திட்டத்தை அறிவித்ததன் மூலம் இந்திய ஒன்றிய அரசு நாடு முழுவதும் இளைஞர்களைப் பெரும் போராட்டத்தில் குதிக்க வைத்துள்ளது. குறிப்பாக பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகாரில் ஐம்பது ரயில் பெட்டிகளையும் ஐந்து ரயில் என்ஜின்களையும் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தி உள்ளனர். ரயில் நிலையத்தில் உள்ள கணினிகளையும் பிற பொருட்களையும் உடைத்து நொறுக்கியுள்ளனர். பீகாரில் மட்டும் ரூ. 200 கோடிக்கும் மேல் சேதம் இருக்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. வேலை இல்லாத் திண்டாட்டம் இளைஞர்கள் மத்தியில் கடுமையாக நிலவி வரும் நிலையில், இராணுவத்தில் சேர்வதன் மூலம் தங்களுடைய எதிர்காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் எனக் கிராமப்புறத்திலுள்ள விவசாயத் தொழிலாளர்கள், வறிய, ஏழை விவசாயிகளின் பிள்ளைகளும், நகர்ப்புறத்திலுள்ள அடித்தட்டு மக்களின் பிள்ளைகளும் நம்புகின்றனர். எப்படியாவது இராணுவத்தில் சேர்ந்து விட வேண்டும் எனக் கருதி அதற்காகப் பயிற்சி அளிக்கும் நிலையங்கள
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்