Skip to main content

Posts

Showing posts from March, 2022

ரசியா- உக்ரைன் போரும் மக்களும்

  கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம். -         பாரதிதாசன் கடந்த மாதம் பிப்ரவரி 24 ந் தேதி உக்ரைனின் மீது தொடங்கிய ரசியப் படைகளின் தாக்குத ல் கள் தொடர்ந்து இன்று ( மார்ச் 20) இருபத்தைந்தாவது நாளாகத் தொடர்கிறது . ரசியாவின் மேற்கு எல்லை ஓரமாக உள்ள உக்ரைன் அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளின் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் (NATO) சேர முயற்சி செய்து கொண்டிருந்தது . அதை ரசியா விரும்பவில்லை . ஏனென்றால் அவ்வாறு உக்ரைன் நேட்டோவில் சேர்ந்து விட்டால் அ மெ ரிக்க , ஐரோப்பிய நாடுகளின் படைகள் உக்ரைனின் பாதுகாப்பு என்ற பெயரில் ரசியாவின் மேற்கு எல்லையில் கொண்டு வந்து நிறுத்தப்படும் . அணு ஆயுதங்கள் உட்பட அனைத்துப் படைக்கலன்களும் ஏவுகணைகளும் ரசியாவின் எல்லையில் குவிக்கப்படும் . அது ரசியாவின் பாதுகாப்புக்குப் பேராபத்தாக முடியும் என ரசியா கருதியது . அதனால் உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதைக் கடுமையாகப் புடின் எதிர்த்தார் .  மேலும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்து விட்டால் , அமெரிக்க , ஐரோப்பிய நாடுகள் தனக்குத் துணைக்கு