" பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள் " என்ற தலைப்பிலான கட்டுரையைச் செந்தழல் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தோம் . பாசிசம் என்பது முதலாளித்துவ நெருக்கடியின் விளைவு என்றும் முதலாளித்துவத்தை வீழ்த்திப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அதிகாரத்தை நிலை நாட்டாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்றும் அதில் தெளிவுபடுத்தியிருந்தோம் . அதற்கு தோழர் தியாகு அவர்கள் தாழி எண் 453 இல் ‘ பிற்போக்கும் பாசிசமும் ஒன்றா?’ என்ற தலைப்பில் தமது மறுப்பை எழுதியிருந்தார். அவருடைய மறுப்பை இதன் இறுதியில் பின்னிணைப்பாக கொடுத்துள்ளோம். அதில் அவர் பருண்மையான ( உருநிலை ) பிரச்சனைகளுக்கு பருண்மையான தீர்வுகள் தான் தனது அணுகுமுறை என்றும் , 2024 நாடாளுமன்றத் தேர்தல் தான் பருண்மையான ( உருநிலை ) சிக்கலாக உள்ளது என்றும் குறிப்பிடுகிறார் . தியாகு அவர்களுக்கு இந்திய முதலாளி வர்க்கத்திற்கும் இந்தியப் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடையேயான முரண்பாடும் , போராட்டமும் பருண்மையான சிக்கலாகத் தெரியவில்லை போலுள்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்