கர்நாடகாவிலும், காசுமீரிலும் பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்து எழுந்துள்ள சர்ச்சைகள் மூலம் மத உரிமைகளைப் பின்பற்றுவது குறித்து விவாதங்கள் நாடெங்கும் இன்று முன்வந்துள்ளன. இதை ஒரு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி மத அடிப்படையில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களிடம் தங்களுடைய வாக்கு வங்கியை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அதிகரித்துக் கொள்ளவும் கர்நாடகத்திலும் மத்தியிலும் ஆட்சியில் உள்ள முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான ஏஜண்டான பா.ஜ.க. திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. நடந்தது என்ன? கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பயின்று வரும் 11 மற்றும் 12-ம் வகுப்பைச் சேர்ந்த 8 மாணவிகள், ஹிஜாப் அணிந்து வந்ததால் வகுப்புகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்தப் பள்ளியில் ஹிஜாப் அணிவது நடைமுறையில் இல்லை. அந்தப் பள்ளியில் மொத்தம் 76 முஸ்லீம் மாணவிகள் பயில்கின்றனர், அதில் 8 மாணவிகள் மட்டும் பெற்றோர் மூலம் டிசம்பர் மாதம் பள்ளித் தலைமையிடம் ஹிஜாப் அணிந்து வர அனுமதி கேட்டனர். பள்ளி நிர்வாகம் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்