மக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா? கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று.
அண்மைக் காலங்களில் அறிவுஜீவிகள் , மனித உரிமைச் செயல்வீரர்கள் , திரைப்படத் தயாரிப்பாளர் , பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , மாணவர்கள் , மற்றும் இதழியலாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதும் , சிறைப்படுத்தப்படுவதும் , பிணை மறுக்கப்படுவதும் , மருத்துவ உதவிகள் நிராகரிக்கப்படுவதும் , சிறையில் அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படாமல் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றன . இந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன? இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ( இ.த.ச. ) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது: ‘ இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பெற்ற அரசினை எழுத்து , சொல் , சைகை , அல்லது பார்க்கக்கூடிய சாதனங்கள் மூலமாக , அல்லது வேறுவகையில் , வெறுப்புக்கு அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்குகிற , அல்லது அரசுக்கு எதிராக அதிருப்தியைக் கிளறுகிற ஒருவர் ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுவார் அல்லது மூன்று ஆண்டுகள் வரையில் நீடிக்கக்