Skip to main content

Posts

Showing posts from August, 2022

ஷின்டா ஒன்னானோகோ (இறந்துபோன பெண்) - நசீம் இக்மத்

  ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் நான் வந்து நிற்கிறேன் மௌனமான என் காலடி ஓசை யாருக்கும் கேட்கவில்லை கதவைத் தட்டினாலும் என்னைக் காண்பாரில்லை ஏனென்றால் நான் இறந்துவிட்டேன் , வெகு நாட்களுக்கு முன்பாக ஹிரோசிமாவில் நான் இறந்துவிட்டேன் அன்றைக்குப் போலவே இப்போதும் எனக்கு வயது ஏழுதான் குழந்தைகள் இறந்துவிட்டால் அவர்கள் வளர்வதில்லை சுழன்றடித்த தீச்சுவாலை எனது முடியைக் கருக்கிவிட்டது எனது பார்வை மங்கி எனது விழிகள் இருண்டுவிட்டன மரணம் வந்து எனது எலும்புகளைச் சாம்பலாக்கியது அதுவும் வீசிய காற்றில் பறந்து பரந்தது எனக்கு பழம் தேவையில்லை சோறும் தேவையில்லை இனிப்பும் தேவையில்லை ,  ரொட்டியும் கூட வேண்டியதில்லை . எனக்காக நான் எதையும் கேட்கப்போவதில்லை ஏனென்றால் நான் இறந்துவிட்டேன் , நான் இறந்துவிட்டேன் நான் கேட்பதெல்லாம் அமைதி ஒன்றுதான் இன்று நீங்கள் போரிடுங்கள் உலகின் குழந்தைகள் உயிர் வாழவும் வளரவும் சிரித்து விளையாடவும் .   இன்று நீங்கள் போரிடுங்கள் . ஆங்கிலத்திலிருந்து தமிழில் நிழல்வண்ணன் நன்றி: Janatha Weekly.

ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சிகளின் ஏமாற்றுச் சித்து வேலைகளும்!

பாஜகவும் , அதன் சங்பரிவாரங்களும் தொடர்ந்து மத நச்சுக் கருத்துகளைப் பரப்புவதும் , சிறுபான்மை மதத்தினரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதும் , பெரும்பான்மை இந்து மதத்தை ஆதிக்க அடையாளமாகப் பயன்படுத்துவதுமாகவும் செய்து வருகின்றன . மேலும் , வரலாற்றைத் திரிப்பதும் , அறிவியலுக்கு எதிராகப் போலி அறிவியலைப் பரப்புவதும் , இதன் மூலம் தன்னுடைய மதரீதியிலான ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன . இந்திய முதலாளிய ஆளும் வர்க்கத்தின் அகோரப் பசிக்காக அனைத்து வளங்களையும் , செல்வங்களையும் தாரை வார்க்கவும் , வரைமுறையின்றி , கேள்விக்கிடமின்றித் தொழிலாளர்களைச் சுரண்டவும் பல்வேறு வழிவகைகளைச் செய்துக் கொடுத்து வருகிறது பிஜேபி அரசு , இதனால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடிகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் தடுப்பதற்காக   அவர்களை மத ரீதியாகவும் , சாதி ரீதியாகவும் பிரித்து வைக்கவும் , ஒருவருக்கொருவரை எதிரியாக்கி மோதவிட்டு அதன் மூலம் அவர்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்ப

இலவசங்களால் உயிர் வாழ்வது யார்? மக்களா? இல்லை ஆளும் வர்க்கமும் ஆட்சியாளர்களுமா?

அரசு மக்களுக்கு வழங்கிய வண்ணத் தொலைக்காட்சி , மின்விசிறி , கிரைண்டர் , மிக்சி , ஆடு , மாடு , கோழி , மருத்துவச் சிகிச்சைக்கான காப்பீட்டுத் திட்டங்கள் , நூறு யூனிட் மின்சாரம் மாணவர்களுக்கு சைக்கிள் ,  மடிக் கணினி , புத்தகங்கள் , பை , பல்பொடி , செருப்பு , சீருடை உள்ளிட்ட இத்தியாதிகள் – விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் , வருடாந்திர மானியம் , மகளிருக்கான இலவசப் பேருந்துப் பயணம் , கருவுற்ற மகளிருக்கான உதவித்திட்டங்கள் , மாணவிகளுக்கான உயர்கல்வி உதவித்தொகை , கிராமப்புறங்களில் நூறுநாள் வேலை , இலவசக்கல்வி , இலவச மருத்துவம் இப்படி நீள்கின்றன அரசுகளின் மக்களுக்கான திட்டங்கள் . மானியங்கள் , விலையில்லாப் பொருட்கள் , பரிசுப்பொருட்கள் எனப் பெயரிடப்பட்டாலும் இவைகள் இலவசங்கள் என்றே அழைக்கப்படுகின்றன . இவைகள் எதுவும் மக்கள் கேட்டு அரசுகள் வழங்கியதல்ல ; பெரும்பாலும் அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின்பு நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகள் தான் . இந்த இலவசங்கள் ஆட்சேபனைக்குரியவை என்றும் , தவறான முன்னுதாரணங்கள் எனவும் , சில அரசியல் தலைவர்கள் கருத