’ பசியினால் சாவதைவிட நோய்த் தொற்றுகளால் செத்துப்போனாலும் பரவாயில்லை’ என்கிறார் உத்திரப்பிரதேசத் தொழிலாளி (தீக்கதிர், 30.03.2020). நொய்டாவில் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைபார்த்து வந்த இவர் சொந்த ஊரான கான்பூருக்கு செல்ல 500 கி.மீ நடந்தே செல்ல வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டார். மார்ச் 25 முதல் அமலாக்கப்பட்ட முடக்கத்தால் இவர் வேலை பார்த்து வந்த ஜவுளிக்கடையும் மூடப்பட்டது. இதனால் வருமானமின்றி பசியால் வாடிவந்த நிலையில் வேறு வழியின்றிச் சொந்த ஊருக்குத் திரும்பினார். போக்குவரத்து வசதி எதுவுமில்லாத காரணத்தால் ஆயிரக்கணக்கான மக்களோடு இவரும் நடைபயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பினார். வேலை செய்து வந்த இடத்தில் பசியால் சாவதைக் காட்டிலும் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் சொந்த ஊரில் சாவதே மேல் என இவர் மட்டும் கூறவில்லை. இடம்பெயர் தொழிலாளர்கள் அனைவரின் நிலையுமே இத்தகையதாகத்தான் உள்ளது. இந்த நிலை இடம்பெயர் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, அன்றாடக் கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலையும் இது தான். வேலை இல்லாத காரணத்தால் வருவாய் எதுவுமின்றி எத்தனை நாள் இவர்கள் பட்டினியை எதிர்க் கொள
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்