தற்போது நாட்டின் தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினர் அமைப்புசாரா பிரிவில் வேலை செய்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், இந்தத் தொழிலாளர்கள் பட்டபாடு ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும், அது தேசியப் பிரச்சனையாகவும் ஆனது. அந்த நேரத்தில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகு e-shram என்ற இணையவழி உருவாக்கப்பட்டது. அதில் விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்ட தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்வோர், வாகன ஓட்டுனர்கள், சுமை தூக்குவோர், கைவண்டி இழுப்போர், நெசவாளிகள், குடிசைத் தொழில் மற்றும் சிறுதொழில் துறை தொழிலாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா தொழிலாளர்கள், மதிய உணவுத் திட்டத்தில் வேலை செய்வோர், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள் இன்ன பிறரும் அடங்குவர். இந்தத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்புறுதித் திட்டம் ஆகியவை இல்லை. இதுபோன்ற 28 கோடி தொழிலாளர்கள் e-shram இணையவழியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். உத்திரப்பிரதேசத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை 8 கோடியே 30 இலட்சம் ஆகும். இ
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்