2024-- ஆம் ஆண்டுத் தொ டக்கத் தில் ஜெர்மனியில் வான்சீ 2.0 ஊழல் வெளிப்பட்டதிலிருந்து , ஏறத்தாழ பதினைந்து இலட்சம் மக்கள் வலதுசாரிகள் , வலதுசாரி தீவிரவாதிகள் மற்றும் புதிய பாசிஸ்ட் கட்சியான AfD (Alternate for Deutschland - ஜெர்மனிக்கு மாற்று ) க்கு எதிராக ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். சமீ பத்தில் நடந்த வான்சீ மாநாட்டில் , ஜெர்மனியின் தீவிர வலதுசாரிகளின் திட்டம் ஒன்று என்னவென்றால், “ ஜெர்மன்” இனம் இல்லை என AfD- கருதும் பெருந்திரளான மக்களை வெளியேற்றுவது என்பதாகும். இதைத் தொடர்ந்து பெர்லினில் மட்டும் பிப்ரவரியின் முதல் வார இறுதியில் 1 , 50,000 பேர் பெருந்திரளாக தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக ப் போராட்டங்களை நடத்தினர். இந்த ப் பெருந்திரள் மக்கள் போராட்டங்களை ப் புரிந்துகொள்ள அரசியலில் ஈடுபாடு கொண்ட மக்களின் ஆறு கதைகள் உள்ளன. அ வர்கள் வலதுசாரிகளுக்கு எதிராக ஜெர்மனி முழுவதும் ஏராளமான ஊர்வலங்களை நடத்தினர். சில வாரங்களுக்கு முன் , ஜெர்மனி முழுவதும் 300- க்கும் அதிகமான இடங்களில் நடந்த " AfD-- க்கு எதிரா ன " பேரணிகளில் குறைந்த பட்சமாக 8,20,000 மக்கள் கலந்து கொண்டனர்
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்